அருள் மிகு இறைவா இருகரமேந்தி
இறைஞ்சினோம் உன்னையே நாம் (II)
பல்கலைப் பயிற்றும் எம் கலையகம் அறபா
அறிவினில் ஒளிர்ந்திடவே (II)
முறை செல்லும் கலைகள் நிறைவாய் பயிற்றும்
எம் திறன் மிகு ஆயர்களே (II)
அன்போடு பணிவோம் அறிவுகள் பயில்வோம்
பண்பையும் அருள்வாயே – நீ (II)
மும்மொழி கற்போம் முதன்மையாய் நிற்போம்
நல்வழி செல்வோமே நாம் (II)
கலைவளம் பெறவே மன்றங்கள் அமைப்போம்
கவினுறு காவியம் நாளை படைப்போம் (II)
கண்களைக் காக்கும் இமைகள் போல
உடுகொட அறபா கெளரவம் காப்போம் (II)
சத்தியம் அன்பு சமத்துவம் தம்மை
நித்தியம் காத்து நற்பெயர் பெறுவோம் (II)






