மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அமையப்பெற்ற அழகிய கிராமமே உடுகொட கிராமம் ஆகும். அழகிய அத்தனகல்ல ஓயா உடுகொடைக்கு வடக்காக பாய்ந்தோடுவதோடு உடுகொடையை சூல கஹடோவிட்ட, ஓகடபொல ,திஹாரிய போன்ற கிராமங்ஙல் கானப்படுகின்றன.
சுமார் 45 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள உடுகொடை கிராமத்தில் 600 இற்கு மேட்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றன.
உடுகொடையின் மேற்கு எல்லையில் ருக்கஹவில- திஹாரிய பாதையில் அறிவொளி பரப்பும் அறிவாலயமாய் மிளர்கிறது.மே.மா/கம் அறபா மஹா வித்தியாலயம்.
இப் பாடசாலையானது அதிபர், இரு பிரதி அதிபர்கள் , உப அதிபர் , 25 ஆசிரியர்கள் , 2 சிற்றூழியர்ள் மற்றும் சுமார் 400 இற்கு மேட்பட்ட மாணவர்களையும் கொண்டதாக வீறுநடைபோடுகிறது.
1962.05.02 ஆம் திகதி கொ.வ.உடுகொட அரசினார் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பெயரில் அன்றைய மீரிகம பராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜே.பீ ஒபேசேகர அவர்களால் மிகவும் எளிமையான முறையில் திரந்து வைக்கப்பட்டதே இன்றைய அறபா மஹா வித்தியாலயம் ஆகும்.
பாடசாலையானது 1962 இல் தோற்றம் பெறுவதற்கு முன் ஊருக்கு ஒரு பாடசாலையின் தேவை உணரப்பட்டிருந்தது.கஹடோவிட்ட , திஹாரிய ஆகிய பாடசாலைகளுக்கு சென்று இவ்வூர் சிறுவர்கள் கல்வி கற்றதோடு பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர் . அத்தனகல்ல ஆறு அடிக்கடி பெருக்கெடுப்பதால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, போக்குவரத்து வசதியீனங்கள் , பொருளாதார நெருக்கடிகள் என்பன மாணவர்களின் கல்விக்கு பெரும் தடையாக இருந்ததோடு , பெரும்பாலான மாணவர்கள் தமது கல்வியை இடை நடுவில் நிறுத்திக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகினர். இதனால் ஊர் பெரியார்கள் , இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் ஸ்தாபகர்கள் , ஆசிரியர்கள் , வாலிபர்கள் , ஊர் மக்கள் என்போரின் அயராத முயற்சியின் விளைவாகவே இப்பாடசாலை தோற்றம் பெற்றது
பாடசாலைக் கட்டடம் அமையப்பெற்ற காணி மர்ஹும்களான ஏ.ஆர்.எம் ஸாலி, எம்.எஸ்.எம். புகாரி, எம்.எஸ்.எம். பாரூக் என்போருக்கு உரிமையாய் இருந்ததோடு பாடசாலைக் கட்டட வேலைகளுக்கான பூரண அனுமதி அவர்களினால் வழங்கப்பட்டது.
பாடசாலையின் முதல் அதிபராக மர்ஹும் ஏ.எல்.எம். ஸகரிய்யா அவர்கள் செயற்பட்டதுடன், தரம் 01 முதல் 05 வரை வகுப்புக்களுடன் 110 மாணவ மாணவிகளைக் கொண்டதாகவே பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது
மேமா. கம். அறபா மஹா வித்தியாலயத்தின் தோற்றம் அதற்காக எடுத்த முயற்சிகள் பற்றி விரிவான விளக்கம் அல் அறபா என்ற எமது பாடசாலையின் பொன் விழா மலரில் “உடுகொட அறபாவின் தோற்றமும் வளர்ச்சியும்’’ என்ற கட்டுரையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. பாடசாலையின் தோற்றம் முதல் பாடசாலையின் அதிபர்களாக சேவையாற்றியவர்களின் விபரம் பின்வருமாறு,






